---Advertisement---

தமிழிலும் ஒரு ‘#லவ்'(#Love): பாலாஜி மோகனின் புதிய முயற்சி!

By Sri
Published on: October 15, 2025
#Love - Netflix New Series
---Advertisement---

சர்வதேசத் தொடர்களுக்குச் சவால் விடும் வகையில், தமிழ் சினிமா உலகில் இருந்தும் நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடர்கள் உருவாகி வருகின்றன. இயக்குநர் பாலாஜி மோகன் (மாரி2, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும்) இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் உருவாகும் தமிழ் ரொமான்ஸ் சீரிஸும் ‘#லவ்'(#Love) என்ற பெயரிலேயே வெளியாகிறது.

நவீன காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்தக் கதை, ‘கெமிஸ்ட்ரி வேண்டுமா? அல்லது மனம் ஒத்துப் போக வேண்டுமா?’ என்ற இரண்டிற்குமான காதலின் விவாதத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு நபர்கள் ஒரு சவாலை ஏற்றுக்கொள்வதன் மூலம், எப்படி எதிர்பாராத விதமாகக் காதல் பிணைப்புக்குள் வருகிறார்கள் என்பதை நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் இதயப்பூர்வமான தருணங்களுடன் இத்தொடர் பேசவிருக்கிறது.

#Love - Netflix New Series1

இந்தப் புதிய தமிழ் ‘#லவ்'(#Love) தொடர், இன்றைய இளம் தலைமுறையினரின் உறவுச் சிக்கல்களை எவ்வளவு எதார்த்தமாகப் பிரதிபலிக்கிறது என்பதைப் பார்க்க தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோரின் புதிய ஜோடி இந்த நவீன காதலை எப்படிப் பேசப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது.

தமிழிலும் ஒரு ‘#லவ்'(#Love): பாலாஜி மோகனின் புதிய முயற்சி! என்ற தலைப்புக்கு  காரணம் என்னவா இருக்கும்னு பார்த்த, ஏற்கனவே #Love 2016 என்ற பெயரில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஹாலிவுட் வெப் சீரிஸ் வெளியாகி பிரமாண்ட வரவேற்பு பெற்றது.  ஆகவே, அதே பெயரில் தமிழிலும் வெளியாகியுள்ள ‘#லவ்'(#Love)  ஹாலிவுட் தொடரை தழுவிய கதைக்களமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.