நான்கு மகன்கள் இருந்தும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு வருகின்றார்.
ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அப்பையம்மா என்பவருக்கு 72 வயதாகின்றது. இவருக்கு நான்கு மகன்கள் இருக்கிறார்கள். நால்வருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நான்கு மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் வாழும் மூதாட்டி சுயமாக சம்பாதித்து வருகின்றார்.
கூன் விழுந்து முதுகெலும்பு வில்லு போல் வளைந்திருக்கும் நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காதே இவர் தினமும் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தம் தராவிற்கு நடந்தே சென்று இரண்டு கடைகளில் வேலை பார்க்கிறார். அந்த கடைகளில் கிடைக்கும் அட்டைப்பெட்டிகள் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து பழைய பொருட்கள் வாங்கும் கடைகளில் போட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து மருந்து மற்றும் உணவு சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றார்.
அது மட்டும் இல்லாமல் இவரது மகன்கள் இவருக்கு வரும் பென்ஷன் தொகையையும் அவர்களே புடுங்கி கொள்கிறார்கள். இருந்தாலும் மூதாட்டி அவர்களிடம் எந்த பணத்தையும் கேட்பது கிடையாது. தள்ளாத வயதிலும் தொடர்ந்து வேலை செய்து வரும் அந்த பாட்டியை பார்த்த பலரும் வியந்து வருகிறார்கள்.







