ராகவேந்திரா கல்யாண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இது நடிகர் சூப்பர் ஸ்டாருக்கு சொந்தமானது என பெரும்பாலோனோருக்கு தெரியும். ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு 6.50 லட்சம் சொத்து வரி சென்னை மாநகராட்சியால் விதிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 6 மாத காலமாக கொரோனா ஊரடங்கால் விசேஷ வைபவங்கள் எதுவும் நடக்காத நிலையில் இந்த தொகை அதிகம் என ரஜினி தரப்பில் கூறப்பட்டது.
இதை கேட்ட ஐகோர்ட் மனு கொடுத்த ரஜினி தரப்பை கண்டித்தது கோர்ட் நேரத்தை வீணடிப்பதாக கூறியது. இதையடுத்து ரஜினி தரப்பு கோர்ட்டில் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றது.
இந்நிலையில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டில் ராகவேந்திரா கல்யாண மண்டப விவகாரத்தில் நாம் மேல்முறையீடு செய்வதை தவிர்த்திருக்கலாம் அனுபவமே பாடம் என கூறியுள்ளார்.







