---Advertisement---

மலையாள நடிகர் சங்கம் சார்பில் பாவனாவுக்கு நடிக்க வாய்ப்பு மறுப்பு

Published on: October 13, 2020
---Advertisement---

மலையாள நடிகர் சங்கம் கடந்த 2008ல் டுவெண்டி டுவெண்டி என்ற படத்தை தயாரித்தது. நடிகர் சங்க வளர்ச்சிக்காக அனைவரும் கூட்டாக சேர்ந்து நடித்து இப்படத்தை தயாரித்தனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மீண்டும் அதுபோல் பலரும் நடிக்க மலையாள நடிகர் சங்கம் சார்பில் ஒரு படம் தயாரிக்கப்படுகிறது.

கடந்த 2008ல் வந்த படத்தில் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், பிரித்விராஜ் உள்பட பெரும்பாலான நடிகர்களும், பாவனா, நயன்தாரா, கோபிகா உள்பட முன்னணி நடிகைகளும் நடித்திருந்தனர். இந்தப்படம் அப்போது சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்த படத்தில் நடிக்க எந்த நடிகர், நடிகைகளும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுபோல தயாரிக்கப்படும் படத்தில் நடிக்க பாவனாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சில வருடங்கள் முன் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அவர் திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார்.

இந்நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணத்தை மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறுகையில், ‘‘மலையாள நடிகர் சங்கம் சார்பில் 2வது படம் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் முதல்படமான டுவென்டி 20ஐ போலவே அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க உள்ளனர். ஆனால் நடிகை பாவனாவுக்கு இந்த படத்தில் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. அவர் தற்போது நடிகர் சங்க உறுப்பினராக இல்லை. இறந்தவர் எப்படி திரும்ப வர முடியும்? எனவே அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!