ஜீது ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ல் வெளிவந்த த்ரிஷ்யம் படம் தென்னக மொழிகள் அனைத்திலும் சக்கை போடு போட்டது. ஹிந்தியில் மட்டுமே இப்படம் பெரிதாக பேசப்படாத நிலையில் மற்ற மொழிகளில் பெரிதளவில் பேசப்பட்டது.
தமிழில் கமல்ஹாசன் நடிக்க மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே இப்படத்தை இயக்கினார். கடந்த 2015ல் வெளியான இப்படம் தமிழில் பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசன் நடித்து அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஜனரஞ்சகமான படமாக நீண்ட காலம் கழித்து வந்தது இப்படம்.
இந்நிலையில் த்ரிஷ்யம் 2 படம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கேரளாவில் உள்ள தொடுபுழாவில் இதன் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.
மோகன்லால் மற்றும் மீனா என த்ரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த ஜோடியே இப்படத்திலும் நடிக்கிறது.
#Drishyam2 shoot starts in Thodupuzha #MohanLal @Mohanlal #JeethuJoseph #Meena pic.twitter.com/ZuMaeeMKPm
— Nikil Murukan (@onlynikil) October 5, 2020
#Drishyam2 shoot starts in Thodupuzha #MohanLal @Mohanlal #JeethuJoseph #Meena pic.twitter.com/ZuMaeeMKPm
— Nikil Murukan (@onlynikil) October 5, 2020