---Advertisement---

மீண்டும் தர்மயுத்த உதாரணம் ஓபிஎஸ்

Published on: October 5, 2020
---Advertisement---

கடந்த 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. சசிகலா தலைமையில் இயங்கி வந்த அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விலகினார்.

நேரே மெரினாவில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெவின் சமாதியில் உட்கார்ந்து தியானத்தில் ஈடுபட்டார். சசிகலா குடும்பத்தின் முரண்களை முதலில் வெளியில் சொன்னார்.

இருந்தாலும் பெரும்பான்மையானவர்கள் அதிமுகவில் சசிகலா அணியிலேயே இருந்தனர். கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து முதல்வராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களில் , தினகரன் கைகளில் அதிமுக நிர்வாகம் மாறியது. பின்பு சசிகலா, தினகரன் குரூப்பை அதிமுகவினர் ஒதுக்கினர் பிரிந்து போன ஓ.பிஎஸ் உடன் ஒன்று சேர்ந்தனர்.

அதன் பின் இறுதி முடிவு எட்டப்பட்டு ஓபிஎஸ் துணை முதல்வராகவும் எடப்பாடி முதல்வராகவும் இருப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இருவருக்கும் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் கட்சியின் முதல்வர் வேட்பாளர் நாளை மறுநாளான 7ம்தேதி அறிவிக்கப்படும் என்ற சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை ஓ.பிஎஸ் தரப்பில் புதிய செய்தி தரப்பட்டுள்ளது.அதிமுக தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இருக்கும்”

“தமிழக மக்கள், அதிமுக தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டே இதுவரை எனது முடிவுகள் இருந்துள்ளன”  எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! – பன்னீர்செல்வம் * எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! – சமூக வலைதளத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் பதிவு இட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring romantic title reveal themes for Hello Kadhal.

ஆர்யாவின் 40-வது படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனத் தலைப்பு? வைரலாகும் மாஸ் சினிமா அப்டேட்!

Editorial visual featuring actor Suhas for his next Tamil project.

‘மண்டாடி’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்த தமிழ் படத்தில் களமிறங்கும் சுஹாஸ்: லேட்டஸ்ட் சினிமா அப்டேட்!

Editorial visual featuring release postponement themes for Irandu Vaanam.

விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜுவின் ‘இரண்டு வானம்’: ரிலீஸ் தேதி திடீர் ஒத்திவைப்பு!

'ஜெயிலர் 2' விழாவில் பேசிய ரஜினிகாந்த் குறித்த செய்திப் படம்.

பாட்ஷா 2, பேட்டா 2 வேண்டாம்னு சொன்னேன்… ஆனா ஜெயிலர் 2 ஓகே பண்ணியது ஏன்? ரஜினி ஓபன் டாக்!

Editorial visual featuring Rajinikanth appreciating the team of Dorothy.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: படத்தை பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Editorial visual featuring release clash and scheduling themes for Dharman and Indian 3.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ படத்திற்காகப் பின்வாங்கும் ரஜினிகாந்தின் ‘தர்மன்’: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!