கடந்த வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில்99முதல் 2004 வரையிலான காலக்கட்டத்தில் வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங்.
கடந்த 1938ம் ஆண்டு ராஜஸ்தானில் ஐசோல் கிராமத்தில் பிறந்த அவர் கடந்த சில நாட்களாக வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார்.
சில நாட்களாக டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் இந்திய விமானம் காந்தகார் கடத்தப்பட்டபோது தவிர்க்க முடியாத சூழலில் முக்கிய சில முடிவுகளை எடுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பை இவர் வகித்தார்.













