---Advertisement---

சம்பளத்தைக் குறைத்துத் தயாரிப்பாளர்களுக்குக் கைகொடுத்த விஜய் ஆண்டனி! உச்ச நட்சத்திரங்கள் கவனத்துக்கு!

By Sri
Published on: May 5, 2020
---Advertisement---

ஊரடங்கால பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில்  நடிகர் விஜய் ஆண்டனி தனது அடுத்த மூன்று படங்களின் சம்பளத்தை 25 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளார்.

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர் இப்போது தமிழரசன், அக்னி சிறகுகள் மற்றும் காக்கி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் 50 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்து கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கின்றன.

இந்நிலையில் கொரோனாவால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அதை ஏற்ற விஜய் ஆண்டனி தனது 3 படங்களின் சம்பளத்தில் இருந்தும் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரின் அக்னி சிறகுகள் படத்தின் தயாரிப்பாளர் டி சிவா விஜய் ஆண்டனியைப் பாராட்டியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.