---Advertisement---

துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக பிரமுகர் – கட்சியில் இருந்து சஸ்பெண்ட் !

By Sri
Published on: April 7, 2020
---Advertisement---

நேற்று முன் தினம் இரவு விளக்கு ஏற்றும் நிகழ்வின் போது துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிர் அணித் தலைவி மஞ்சு திவாரி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரையும் நேற்றிரவு 9 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற சொன்னார். அதன் படி மக்கள் விளக்குகளை ஏற்றினர். ஆனால் சில இடங்களில் விரும்பத் தகாத சில நிகழ்வுகளும் நடந்தன.

ஒரு சில இடங்களில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை சரியாகக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று விளக்குகளை எரிய விட, சில இடங்களில் தீபாவளிப் போன்று பட்டாசுகளை வெடித்தும் மக்கள் கொண்டாடினர். இந்நிலையில் வட இந்தியாவில் ஒரு வீட்டில் மொட்டை மாடியில் வைத்து வெடிகளை வெடிக்க எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்தது.  இதையடுத்து தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்பது ஆறுதல் ஆக அமைந்தது. இதுபோன்ற சம்பவங்கள் சமூக இடைவெளியைக் குறைக்கும் விதமாக அமைய பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த செயல் கண்டனங்களை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மோடி மனதளவில் உடைந்து போயிட்டார்... பாடி லாங்வேஜ கவனிச்சீங்களா...? கலாய்த்த ராகுல் காந்தி...!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்ராம்புர் மாவட்டத்தின் பாஜக மகளிரணி தலைவராக இருப்பவர் மஞ்சி திவாரி. இவர் கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று முன் தினம் இரவு துப்பாக்கியால் சுட்டு அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். அவரது செயலுக்கு கண்டனங்கள் எழுந்தை அடுத்து போலீஸார் அவர் மேல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக அவர் பதவியில் இருந்தும் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!