கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து இளவரசர் குணமாகியுள்ளது மக்களுகு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 48,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இப்போது இத்தாலி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு அபாயகரத்தை எட்டியுள்ளது. அதன் ஒரு கட்டமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சிகிச்சையில் அவர் அவர் முழுவதும் குணமாகியுள்ளார். ஆனாலும் இன்னும் சில நாட்களுக்கு தனிமையில் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தியானது இங்கிலாந்து மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.







