---Advertisement---

மாநாடு ஷூட்டிங் நிறுத்தம்… சிம்புவைக் கலாய்த்து மீம்ஸ் – தயாரிப்பாளர் ரியாக்‌ஷன் !

By Sri
Published on: March 17, 2020
---Advertisement---

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதை கேலி செய்யும் விதமாக பகிரப்பட்ட மீம்ஸ்களுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் சிம்புவை கேலி செய்யும் விதமாக சில பதிவுகளும் மீம்ஸ்களும் பகிரப்பட்டன.

கேலிகளுக்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் ‘மாநாடு’’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.