வருகிற 2021 தேர்தல் திமுக வாழ்வா சாவா போராட்டம் எனக் கூறிய ரஜினிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
ரஜினி நேற்று தனது கட்சி மாவட்ட செயலாளர்களுடன் பேசியதும் அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த கருத்துகளும் தமிழக அரசியலில் விவாதங்களை எழுப்பியுள்ளன. கட்சி, ஆட்சி என இரண்டுக்கும் வேறு வேறு தலைமை, தனக்கு முதல்வர் பதவி மேல் ஆசை இல்லை என எல்லாவற்றுக்கும் மேலாக திமுகவினரிடையே கவனம் பெற்றது திமுகவுக்கு 2021 தேர்தல் வாழ்வா ? சாவா ? எனப் பேசியதுதான்.
இந்நிலையில் ரஜினியின் இந்த கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். அதில் ‘2021 ஆம் ஆண்டு தேர்தல் எங்களுக்கு வாழ்வுதான். ரஜினிக்கு சக்தி இருந்தால் ஆட்சி மாற்றம் கொண்டுவரட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.









