---Advertisement---

‘418’ படத்திற்கு ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சிகள் அறிவிப்பு: அக்டோபர் 22 இரவு முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

By Sri
Published on: October 20, 2026
Editorial visual featuring the premiere and advance booking updates for 418.
---Advertisement---

தென்னிந்தியத் திரையுலகில் ஹாரர்-த்ரில்லர் ஜானரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான ‘418’ படத்தின் ரிலீசுக்கு முந்தைய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீர்த்தன் நாடகௌடா இயக்கத்தில், பிரசாந்த் நீல் பிரசன்டேஷனில் உருவாகியுள்ள இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிட்டிருக்கும் நிலையில், படக்குழுவினரின் புதிய அப்டேட் தியேட்டர்களை அதிரவைக்கத் தயாராகியுள்ளது.

சினிமா பிரியர்களுக்கு மிரட்டலான திகில் விருந்தளிக்கத் தயாராகி வரும் ‘418’ படத்தின் சிறப்பு ப்ரீமியர் காட்சிகள் அக்டோபர் 22 அன்று இரவு 10:48 மணி ஷோ முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தச் சிறப்புத் திரையிடல்கள் அனைத்து முக்கியத் திரையரங்குகளிலும் அதிநவீன டால்பி அட்மாஸ் (Dolby Atmos) திரைகளில் மட்டுமே பிரத்யேகமாக நடத்தப்படவுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்கள் உச்சக்கட்ட சவுண்ட் எஃபெக்ட் மற்றும் தத்ரூபமான திகில் அனுபவத்தைப் பெற முடியும்.

படத்திற்கான முன்பதிவு (Advance Bookings) நாளை முதல் தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஜெயிலர் 2 விமர்சனம்: ரஜினியின் மாஸ், நெல்சனின் டார்க் காமெடி எடுபட்டதா? முழு சினிமா அலசல்!

சைத்ரா ஆச்சார் மற்றும் சரண் லக்காராஜு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் திகில் அனுபவத்தைத் திரையரங்குகளில் முன்கூட்டியே அனுபவிக்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். வரும் அக்டோபர் 23, 2026 அன்று உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெறும் என வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actor Vadivelu at his new Madurai residence.

மதுரையில் வடிவேலுவின் புதிய மாளிகை: தேனிசை தென்றல் தேவா குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த வைகைப்புயல்!

Editorial visual featuring the song release from Jolliya Iruntha Oruthan.

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு: காதல் கசக்குது லிரிக் வீடியோ ட்ரெண்டிங்!

Editorial visual featuring the pre-release business of Aakasam Lo Oka Tara.

துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒகா தாரா’ பிரம்மாண்ட சாதனை: தியேட்டர் ரிலீசுக்கு முன்பே முழு முதலீட்டையும் மீட்ட படக்குழு!

Editorial visual featuring Arya's upcoming film line-up.

ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: அடுத்தடுத்து வெளியாகும் 4 பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!

Editorial visual featuring reports on Anirudh Ravichander and Kavya Maran.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங், மூன்று இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு!

Editorial visual featuring the music updates for Scene.

சூர்யாவின் ‘சீன்’ படத்திலிருந்து வெளியாகும் ஏரோப்ளேன் பாடல்: தீபாவளி ரிலீசுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!