---Advertisement---

விஜயதசமி ஸ்பெஷல்: 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அசத்திய லெஜெண்ட் சரவணன்!

By Sri
Published on: October 19, 2026
Editorial visual featuring Legend Saravanan at the welfare event.
---Advertisement---

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான திரைப்படங்கள் மற்றும் சமூக நலப்பணிகள் மூலம் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்துவரும் தொழிலதிமரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன், மீண்டும் ஒருமுறை தனது நற்பண்பால் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். விஜயதசமி திருநாளை முன்னிட்டு, அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவின் முக்கியக் சிறப்பம்சமாக, தினசரி உழைப்பை நம்பி வாழும் சுமார் 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழா நடைபெறும் இடத்திற்கு நடிகர் லெஜெண்ட் சரவணன் மாஸாக வந்திறங்கிய தருணம், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவரது வருகையை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் எழுப்பிய முழக்கங்கள் அரங்கை அதிரச் செய்தன.

விழாவில் கலந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர்களை அன்போடு வரவேற்று, தனது சொந்தக் கைகளால் நலத்திட்ட உதவிகளை வழங்கிய லெஜெண்ட் சரவணன், அவர்களுடன் சுமுகமாகப் பேசி நலம் விசாரித்தார். விழாவில் திரண்டிருந்த உழைப்பாளர் பெருமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்வோம் என்று அவர் உறுதியளித்தார். நடிகர் லெஜெண்ட் சரவணனின் இந்தச் சமூகப் பொறுப்புணர்வு மிக்க செயலையும், அவரது பிரம்மாண்டமான வருகையையும் குறிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், சினிமா துறையினர் மற்றும் பொதுமக்களின் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றன.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the music updates for Scene.

சூர்யாவின் ‘சீன்’ படத்திலிருந்து வெளியாகும் ஏரோப்ளேன் பாடல்: தீபாவளி ரிலீசுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

Editorial visual featuring the story buzz around Dhanush's Om.

சந்தனக் கடத்தல் வழக்கின் பின்னணி உண்மைகள்: ‘ஓம்’ படத்தின் கதைக்களம் குறித்து வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring the release trailer of 418.

‘418’ படத்தின் மிரட்டலான ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு: அக்டோபர் 23-ல் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ்!

Editorial visual featuring the box-office success of Jailer 2.

ஜெயிலர் 2 வசூல் சாதனை: வெறும் 4 நாட்களில் ரூ. 400 கோடியைக் கடந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய சாதனை!

Editorial visual featuring the announcement of John Doe.

அர்கா மீடியா வொர்க்ஸின் புதிய மர்மப் படம் ‘ஜான் டூ’: அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியானது அதிரடி அறிவிப்பு!

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!