---Advertisement---

ரஜினிகாந்திற்காக எழுதப்பட்ட கதை: ரவி மோகனுக்காக மாறிய ‘கராத்தே பாபு’ – சுவாரஸ்யமான தகவல்!

By Sri
Published on: September 11, 2026
File photo of director Ganesh K Babu and actor Ravi Mohan for Karathey Babu.
---Advertisement---

இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த இயக்குநர் கணேஷ் கே பாபு (Ganesh K Babu), தற்போது நடிகர் ரவி மோகனுடன் இணைந்து ‘கராத்தே பாபு’ (Karathey Babu) திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், படம் குறித்த பல சுவாரஸ்யமான பின்னணித் தகவல்களை இயக்குநர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “‘கராத்தே பாபு’ கதை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் sir-ஐ மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டது. குறிப்பாக, அவர் சட்டமன்றத்தில் ‘மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…’ என்று பேசும் காட்சியை கற்பனை செய்துதான் அந்தச் பிரேமை உருவாக்கினேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “‘டாடா’ படத்திற்குப் பிறகு ரவி மோகன் sir-க்கு ஒரு ரொமான்டிக் காமெடி கதையைத்தான் நான் கூறினேன். ஆனால் அவர் வேறு ஒரு வித்தியாசமான கதையைக் கேட்டார். உடனே நான் அவரிடம் ‘கராத்தே பாபு’ கதையைச் சொன்னேன். அவருக்கு உடனடியாகக் கருத்து பிடித்துப்போக, அவருக்காகவே அப்படத்தின் கதையை முழுமையாக மாற்றி அமைத்தேன்,” என்றார்.

ரவி மோகனின் இளமைக் காலத் தோற்றத்தை மனதில் வைத்தே இப்படத்தின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்குப் பிறகு ரவி மோகன் அனைவரின் நாயகனாக மாறுவார் என்றும், அவரது சினிமா வாழ்க்கையில் இதுவரை பார்க்காத ஒரு மிரட்டலான நடிப்பை இதில் பார்க்க முடியும் என்றும் கணேஷ் கே பாபு நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional compilation banner featuring actor Ravi Mohan's upcoming movie projects.

ரவி மோகனின் மிரட்டலான சினிமா லைன்அப்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள் – முழு விவரம்!

Official production update banner for Sivakarthikeyan's upcoming film Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் முக்கிய அப்டேட்: விறுவிறுப்பாக முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Official teaser launch banner for the thriller film Dhik Dhik Dhik.

ரகசியமும் ஆபத்தும் நிறைந்த ‘திக் திக் திக்’ டீசர்: நடிகர் ஆர்யா வெளியிட்ட மிரட்டலான வீடியோ!

Official trailer release announcement banner for Hiphop Tamizha's Meesaya Murukku 2.

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ டிரெய்லர் அப்டேட்: செப்டம்பர் 25-ல் ரிலீசாகும் படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

soori-salary-ravikumar-movie

சூரியின் அடுத்த பட சம்பளம் 25 கோடியா? ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம்!

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!