மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) தயாரிப்பில், ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணி திரைப்படமான ‘மொத ராத்திரி’ (Modha Rathiri) நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அணில்குமார் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு பாரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இதே மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடித்த ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) படக்குழுவினர், ‘மொத ராத்திரி’ படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளை உற்சாகமாகக் தெரிவித்துள்ளனர். “GOD BLESS U MAAMEY ✨” என்ற வாழ்த்துடன் தொடங்கியுள்ள இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஒரு திருமண வீட்டின் சுவாரஸ்யமான மற்றும் குழப்பமான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், சென்சார் போர்டில் ‘யூ/ஏ’ (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. நாளை திரைக்கு வரும் இப்படத்திற்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.













