கடந்த ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியான ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் உரிமைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமையை பிரபல முன்னணி நிறுவனமான சோனி லிவ் (SonyLIV) நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த அறிவிப்பு படத்தின் மீதுள்ள டிஜிட்டல் ரீதியான எதிர்பார்ப்புகளை மேலும் பலமடங்கு உயர்த்தியுள்ளது.
View this post on Instagram
தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி முடித்த இப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தரமான கன்டென்ட் மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் திரைக்கு வந்த இப்படத்திற்கு, தற்போது டிஜிட்டல் தளத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. திரையரங்குகளில் படத்தை மிஸ் செய்த சினிமா ரசிகர்கள் ஓடிடி வெளியீனுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
தியேட்டரிகல் வெற்றியைத் தொடர்ந்து ஓடிடி உரிமம் பெரிய தொகைக்கு வணிகம் செய்யப்பட்டுள்ளதால், படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சோனி லிவ் ஓடிடி தளத்தில் இப்படம் உலகளவில் விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். குடும்பங்கள் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஓடிடி ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.













