---Advertisement---

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

By Sri
Published on: June 4, 2026
Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.
---Advertisement---

இப்போதெல்லாம் தமிழ் திரையுலகில் பழைய கிளாசிக் ஹிட் மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்யும் ட்ரெண்ட் மிக பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போதைய தலைமுறை ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த எவர்கிரீன் படங்களை தியேட்டர்களில் பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் குஷிப்படுத்தும் வகையில் ஒரு மிக பிரம்மாண்டமான ரீ ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நம்ம 90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காதல் காவியமாக கொண்டாடப்படும் “துள்ளாத மனமும் துள்ளும்” திரைப்படம் விரைவில் தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸாகப் போகிறது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் முன்னணி நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியாகி, அப்போதைய காலகட்டத்தில் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்த இந்த திரைப்படத்தை தற்பொழுது மீண்டும் தியேட்டர்களுக்கு கொண்டு வரவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் எழில் இயக்கத்தில், எஸ் ஏ ராஜ்குமார் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் இன்றும் பலருடைய காலர் டியூனாகவும், ஃபேவரைட் பிளேலிஸ்ட்டாகவும் இருந்து வருகிறது. லவ் ஃபெயிலியர் மற்றும் எமோஷனல் காதல் கதையாக உருவான இந்த படம், விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒரு மைல்கல் திரைப்படமாகும். இப்போ இந்த படம் மீண்டும் 4K மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் தற்போதே தியேட்டர்களில் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.