---Advertisement---

THE GAME IS ON: “களம் இறங்கும் துல்கர் சல்மான்!” — ஆகஸ்ட் 20 முதல் திரையரங்குகளில் ‘ஐ அம் கேம்’; சூதாட்ட பின்னணியில் ஒரு மெகா ஆக்‌ஷன்!

By Sri
Published on: May 9, 2026
Official release poster of Dulquer Salmaan's I'm Game movie directed by Nahas Hidhayath.
---Advertisement---

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் துல்கர் சல்மான், ‘கிங் ஆஃப் கோதா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அதிரடியான ஆக்‌ஷன் களத்தில் இறங்கியுள்ளார். ‘RDX’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் நடித்துள்ள ‘ஐ அம் கேம்’ (I’m Game) திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்தப் படம், துல்கரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

சூதாட்டம் மற்றும் த்ரில்லர் கலந்த கதை:

“Roll Your Dice” என்ற வாசகத்துடன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள், இது சூதாட்டத்தை (Gambling) மையமாகக் கொண்ட கதை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. உயர் ரக பந்தயங்கள், ரிஸ்க்கான விளையாட்டுகள் மற்றும் அதில் நடக்கும் குற்றப் பின்னணியை இந்தப் படம் பேசுகிறது. துல்கர் சல்மான் இதுவரை நடித்திராத ஒரு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் அவதாரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 156 நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

மெகா பட்ஜெட்டும் நட்சத்திர பட்டாளமும்:

துல்கரின் ‘வேஃபாரர் ஃபிலிம்ஸ்’ (Wayfarer Films) தயாரித்துள்ள இப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. தமிழ் நடிகர் மற்றும் இயக்குநர் மிஷ்கின், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ‘RDX’ நாயகன் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைப் பயிற்சி படத்தில் மிக முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் எனப் பான்-இந்தியா அளவில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இனிவரும் மாதங்களில் வெளியாகயுள்ள ‘திரிஷ்யம் 3’ மற்றும் ‘ரவுடி ஜனார்த்தனா’ போன்ற படங்களின் வரிசையில், ‘ஐ அம் கேம்’ திரைப்படமும் ரசிகர்களின் “வாட்ச்-லிஸ்டில்” முதலிடம் பிடிகக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!

Dhanush's D56 movie launch and pooja poster.

கோலாகல பூஜையுடன் தொடங்கிய தனுஷின் Glimpse of ‘D56’: கோடை 2027-ல் ரிலீஸ்!