---Advertisement---

“என்னை ஏமாற்றிவிட்டார்கள்!” எரும சாணி விஜய் மீது பாய்ந்த புகார்! கதறி அழுத மலையாள நடிகை! நடந்தது என்ன?

By Sri
Published on: April 26, 2026
Malayalam actress Anuraga S. Nambiar complaining against Eruma Saani Vijay and his wife regarding the Resort web series.
---Advertisement---

யூடியூப் மூலம் பிரபலமாகி, தற்போது சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ‘எரும சாணி’ விஜய் குமார் மற்றும் அவரது மனைவி மீது மலையாள நடிகை அனுராகா எஸ்.நம்பியார் சுமத்தியுள்ள புகார்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “என்னை ஏமாற்றிவிட்டார்கள்” என கண்ணீர் மல்க அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அனுராகா தனது புகாரில், ‘ரிசார்ட்’ (Resort) என்ற இணையத் தொடருக்காக, அதன், தயாரிப்பு நிறுவனம் தன்னுடன் ஓராண்டு ஒப்பந்தம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒப்பந்தம் செய்தபடி படப்பிடிப்புகளை நடத்தாமலும், பேசிய சம்பளத்தைத் தராமலும் தன்னை வஞ்சித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “சம்பளம் தராமல் இழுத்தடித்தது மட்டுமன்றி, வேறு படங்களிலும் கமிட் ஆக முடியாதபடி எனது நேரத்தை வீணடித்தனர்” என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்ட உணவு மிகவும் தரம் குறைவாக இருந்ததாகவும், இதனால் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டபோது விஜய் குமாரின் மனைவி தன்னை மிகவும் இழிவாகப் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இளம் கலைஞர்களை மிரட்டி வேலை வாங்கும் இதுபோன்ற நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை விஜய் குமார் தரப்பிலிருந்து இந்தப் புகார்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. பிக்பாஸ் மற்றும் பல சினிமா வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் கலைஞர்கள் இது போன்ற ஒப்பந்தங்களில் கவனமாக இருக்க வேண்டும் என இந்தச் சம்பவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Compilation graphic of hot upcoming OTT releases like Save The Tigers Season 3, Athiradi, and The Creator on streaming platforms.

“இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!”.. ஜூன் 19 & 20-ல் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெகா படங்கள் மற்றும் சீரிஸ்.. முழு ரிலீஸ் லிஸ்ட் இதோ!

Actors Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Director Anil Ravipudi during the official pooja ceremony of VenkyAnil5 NKRAR2 project.

“தியேட்டரில் வெறித்தனமான ஃபன் கேரண்டி!”.. வெங்கடேஷ் – கல்யாண் ராம் கூட்டணியில் அனில் ரவிபுடியின் மெகா மல்டிஸ்டாரர் லோடிங்.. பூஜையுடன் தொடங்கிய பிரம்மாண்டப் பயணம்!

Actor-director Vishal in a powerful posture from the official promotional banner of Magudam movie first single Rise of Linga.

“மாஸ் காட்ட வரும் விஷாலின் ரைஸ் ஆஃப் லிங்கா!”.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஜிவி பிரகாஷின் அதிரடி ட்ரீட்!

Director Shankar son Arjith Shankar along with director H Vinoth and Jason Sanjay during the official movie launch event of Lover Boy.

“டைட்டில் லவ்வர் பாய்.. பக்காவா லாக் செய்த காம்போ!”.. கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.. விஜய் மகன் சஞ்சய், இயக்குநர் ஹெச் வினோத் நேரில் வாழ்த்து!

Producer Ishari K Ganesh of Vels Film International sharing upcoming movie release updates during a corporate press meet.

“அடுத்தடுத்து தியேட்டருக்கு வரும் வேல்ஸ் படங்கள்!”.. ஐசரி கணேஷ் வெளியிட்ட அதிரடி லோடிங்.. ஜூலை 3-ல் ரிலீஸாகும் ‘கட்டா குஸ்தி 2’!

Actor Dhanush in a fierce and intense look from the official First Strike video layout of OM movie directed by Rajkumar Periasamy.

“அமரன் இயக்குநரின் அடுத்த ருத்ரதாண்டவம்!”.. தனுஷின் D55 படத்திற்கு ‘ஓம்’ என மாஸ் டைட்டில் பிக்ஸ்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான வெறித்தனமான ஃபர்ஸ்ட் ஸ்டிரைக் வீடியோ!