---Advertisement---

Cheran vs Sathya Jyothi : “சுதீப் படம் நின்னதுக்கு சேரன் தான் காரணமா?” – அட்வான்ஸ் தொகையைத் திரும்பக் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்; கோலிவுட்டில் பரபரப்பு!

Published on: April 23, 2026
A collage showing Kichcha Sudeep from his movie Max and director Cheran.
---Advertisement---

தமிழ் சினிமாவில் உணர்ச்சிகரமான கதைகளைப் படைப்பதில் வல்லவர் இயக்குனர் சேரன் (Cheran). கடந்த 2023-ம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பின் (Kichcha Sudeep) 47-வது திரைப்படத்தை (#K47) சேரன் இயக்கப்போவதாகவும், அதனைப் பிரபல நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் (Sathya Jyothi Films) தயாரிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படாமல் போனது. பின்னர் சுதீப்பின் 47-வது படமாக விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் ‘மேக்ஸ்’ (Max) திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், சேரனுக்கும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே தற்போது ஒரு நிதிச் சர்ச்சை வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Director Cheran and Actor Kichcha Sudeep during the official announcement of their shelved project #K47.
“தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்”: இயக்குனர் சேரன் – சத்ய ஜோதி பிலிம்ஸ் சர்ச்சை!

மேலும், ப்ரீ-புரொடக்ஷன் செலவுகளைக் கேட்டு சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது . சமீபத்திய தகவல்களின்படி, இந்தப் படத்திற்காக இயக்குனர் சேரனுக்கு வழங்கப்பட்ட முன்பணம் (Advance Salary) மற்றும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளுக்காக (Pre-production) செலவு செய்யப்பட்ட தொகையைத் திரும்பக் கேட்டு சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியுள்ளது. படம் கைவிடப்பட்டதால், அந்தத் தொகையைத் திரும்பப் பெறுவது நியாயம் எனத் தயாரிப்புத் தரப்பு வாதிடுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்ட ரீதியான மோதல் எப்படி முடியப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், ஒரு மூத்த இயக்குனர் மீதான இந்தப் புகார் செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

A symbolic graphic representing the power imbalance and casting couch issues in the film industry as discussed by JD Chakravarthy.

Industry Secrets : “அவர் தாத்தா வயசு.. ஆனால் பேசியது அசிங்கம்” – பிரபல நடிகை வீட்டில் படுக்கைக்கு அடியில் ஒளிந்திருந்த ஜேடி சக்ரவர்த்தி; உடைக்கும் அதிர்ச்சி உண்மைகள்!

Music maestro Ilaiyaraaja composing for the upcoming movie Valmiki Ramayana directed by Bhavna Talwar.

Valmiki Ramayana : “ராமாயணத்திற்கு இசையமைக்கும் இசைஞானி” – இளையராஜா – ஆனந்த் நீலகண்டன் கூட்டணியில் புதிய காவியம்; ரிலீஸ் எப்போது?

Actor Salman Khan and Director Vamshi Paidipally at the official pooja ceremony of their new film produced by SVC.

Salman – Vamshi : “சல்மான் கான் – வம்சி பைடிபள்ளி கூட்டணியில் மெகா புராஜெக்ட்” – மும்பையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; தில் ராஜுவின் பிரம்மாண்ட தயாரிப்பு!

Music composer Sai Abhyankkar and actress Kayadu Lohar in a still from Pavalamalli song celebrating 100 million views.

Pavazha Malli Record : “10 கோடி இதயங்களை வென்ற பவழமல்லி” – யூடியூபில் மெகா சாதனை படைத்த சாய் அபியங்கர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Official poster of Thalapathy Vijay's Jana Nayagan movie with KVN Productions logo.

Jana Nayagan Update : “ஏப்ரல் 30-ல் ஜன நாயகன் வருகிறாரா?” – சென்சார் போர்டுக்கு செல்லும் விஜய் படம்; விநியோகஸ்தர்களைச் சந்திக்க சென்னை வரும் தயாரிப்பு நிறுவனம்!

Superstar Rajinikanth and Director Nelson Dilipkumar at the Jailer 2 wrap-up party with actor Vasanth Ravi.

Jailer 2 Update : “13 மாத காத்திருப்பு முடிந்தது” – ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு; பிளாஷ்பேக் காட்சியில் வசந்த் ரவி? நெல்சன் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்!