தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘யூத்’ (Youth). நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ் இப்படத்தின் மூலம் நடிகராக மட்டுமின்றி, கதை, திரைக்கதை எழுதி இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வரும் இப்படத்திற்கு தற்போது அண்டை மாநிலங்களில் இருந்தும் பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.
காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி, கென் கருணாஸின் யூத் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் (X) பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார். “நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருந்தேன். காதல், நட்பு மற்றும் ஆழமான உணர்ச்சிகள் நிறைந்த இந்த படம் பெற்றோருக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு இதயபூர்வமான படைப்பு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே ஆளாக எழுதி, இயக்கி, நடித்திருக்கும் கென்னின் திறமை பாராட்டுக்குரியது என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
After a long time, I found myself smiling throughout an entire film. #Youth is filled with love, friendship, and deep emotions — a heartfelt tribute dedicated to all parents.
Single handedly writing, directing and acting with such nuanced depth is truly commendable. Every actor… pic.twitter.com/uaz5NV2Z2u
— Rishab Shetty (@shetty_rishab) April 20, 2026
இந்த படத்தில் நடித்துள்ள சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி மற்றும் நண்பர்கள் குழுவின் எதார்த்தமான நடிப்பையும் ரிஷப் ஷெட்டி பாராட்டியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் திரையில் மிகவும் இயல்பாக உயிர் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், “சகோதரர் கென், நீங்கள் சினிமா உலகிற்கு ஒரு பெரிய சொத்து” என்று அவர் குறிப்பிட்டிருப்பது ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களான இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவாளர் விக்கி மற்றும் எடிட்டர் நாஷ் ஆகியோரின் பணியையும் ரிஷப் சுட்டிக்காட்டியுள்ளார். 6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ஏற்கனவே 80 கோடி வசூலை கடந்து 2026-ன் பிளாக்பஸ்டர் ஹிட் லிஸ்டில் உள்ளது. ஆர்ஜே பாலாஜியின் பாராட்டை தொடர்ந்து, தற்போது ரிஷப் ஷெட்டி போன்ற ஒரு பான் இந்தியா ஸ்டார் இப்படத்தை பாராட்டியிருப்பது படத்தின் ஓடிடி வரவேற்பையும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













