---Advertisement---

பரியேறும் பெருமாள் சிறந்த படமாக தேர்வு – புதுச்சேரி அரசு அறிவிப்பு

By Sri
Published on: September 11, 2019
pariyerum perumal
---Advertisement---

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படம் புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்பட விருதை பெற்றுள்ளது.

சாதி பாகுபாடு, சாதி அவலம், ஆணவக்கொலை பற்றி பேசிய திரைப்படம் பரியேறும் பெருமாள். இத்திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. கடந்த வருடத்திற்கான தேசிய விருது பட்டியலில் இப்படம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு எந்த விருதும் அறிவிக்கப்படவில்லை இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

pariyerum perumal 1

தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலரும் இதை கண்டித்தனர். இந்நிலையில், புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் ஸ்வாமிகள் விருதுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது புதுச்சேரியில் உள்ள முருகா திரையரங்கில் வருகிற 13-ஆம் தேதி நடைபெறும் விழாவில் அந்த மாநில முதல்வர் நாராயணசாமி ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கான விருதை வழங்குகிறார். இந்த விருதை அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றுக்கொள்கிறார். பாராட்டு பத்திரத்துடன் ஒரு லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. மேலும் அன்றுமாலை இப்படத்தை ரசிகர்கள் இலவசமாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.