---Advertisement---

ஜம்மு காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு சரியான பாடம் புகட்டி இருக்காங்க… திருமாவளவன் கருத்து…!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

ஜம்மு காஷ்மீரில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள் என்று திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கின்றார்.

அரியானாவில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பாஜக பிடித்துள்ளது. இதனால் மூன்றாம் முறையாக பாஜக அங்கு ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மையான இடங்களை பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றது.

ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து தமிழகத்தை சேர்ந்த எம்பி திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர் ஜம்மு காஷ்மீரில் எதிர்பார்த்தது போல இந்திய கூட்டணி தேசிய மாநாடு கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கின்றது. ஜம்மு காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு மிகப்பெரிய பாடத்தை புகட்டி இருக்கிறார்கள்.

ஹரியானாவில் கருத்துக்கணிப்பில் சொன்னது போல நடக்கவில்லை. இந்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் சிதறி போய் தனித்தனியாக நின்றதால் வாக்குகளும் சிதறிவிட்டது. இனிவரும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்திய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு பாடம்.

இருப்பினும் வலுவான எதிர்க்கட்சி உருவாகி இருக்கின்ற.து பிற கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இருந்தால் பாஜகவின் வெற்றியை எப்படியும் தடுத்திருக்க முடியும். கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் இன்னும் தீவிரம் காட்டவில்லை. அகில இந்திய அளவில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கு முன் வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 100 இடத்தில் வெற்றி பெற்றதும் வாக்கு சதவீதத்தை அதிகரித்ததும் அதற்கு ஒரு சான்று என்று தெரிவித்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sivakarthikeyan meeting with Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.

A bond that continues forever: சிவகார்த்திகேயன் – முதல்வர் விஜய் சந்திப்பு: நெகிழ்ச்சியில் திரையுலகம்!

News update regarding Shalini Ajith Kumar presenting Ajith Kumar's new film AK64, marking his entry into production.

Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!