கர்நாடகாவை உலுக்கிய பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் 24 வயதான மகாலட்சுமி என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்திருக்கின்றார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் நிலமங்களா பகுதியில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்து மகாலட்சுமி வசித்து இருந்த வீட்டை பார்த்தனர்.
அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வீட்டை திறந்து பார்த்தபோது மகாலட்சுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல்கள் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் இந்த உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு பின்னர் அவரது உடல் பாகங்கள் 50 துண்டுகளாக வெட்டி கூறு போடப்பட்டது தெரிய வந்தது. இந்த பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மகாலட்சுமியின் தாயான மீனா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் சில நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்கள். மகாலட்சுமியே தினமும் அவருடன் மாலில் ஆண்கள் அழகு நிலையத்தில் வேலை பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர்தான் அழைத்து வந்து விடுவது தெரிய வந்தது. மேலும் தனிப்படை போலீசார் அந்த வாலிபர் யார் என்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் போலீசார் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போன் என்னை கைப்பற்றி மேலும் நான்கு சிம்காடுகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அப்போதுதான் மகாலட்சுமி அடிக்கடி தனது செல்போனில் இருந்து தலைமறைவாக இருக்கும் மேற்குவங்க வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.
எனவே காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்திருக்கிறார்கள். இது குறித்து போலீஸ் கமிஷனர் தயானந்த தெரிவித்திருந்ததாவது கொலை குற்றவாளி யார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார். மகாலட்சுமியை கொலை செய்த பிறகு இறைச்சியை வெட்டுவது போல் வெட்டி இருக்கிறார்கள்.
அவரது உடல் உறுப்புகளை சூட்கேசில் ஏற்றி செல்ல கொலையாளி முயற்சி செய்து இருக்கின்றார். ஆனால் அது முடியாத காரணத்தினால் குளிர்சாதனம் பெட்டியில் வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். மகாலட்சுமி உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப்பெட்டி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளியை தேடி மேற்குவங்க மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் சென்று இருக்கிறார்கள். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.













