---Advertisement---

பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர்… வரும் 24ஆம் தேதி டெல்லி பயணம்…!

By Sri
Published on: September 20, 2024
---Advertisement---

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 24ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சென்னையில் 2-ம் கட்டம் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 118.09 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கின்றது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசு பலமுறை கேட்டிருக்கின்றது. ஆனால் இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மாநில அரசு செய்வதாக மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கிடையே மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் காரணமாக புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீடை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கின்றது.

இந்த நிதியை உடனே விடுவிக்கும்படி தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என கூறிவிட்டது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் செல்ல முடிவு செய்து இருக்கின்றார்.

சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சென்னை திரும்பிய இவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி வருகின்ற 25ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என கூறப்படுகின்றது. அதன்படி சென்னையில் இருந்து 24 ஆம் தேதி டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் முதல்வர் மறுநாள் 25ஆம் தேதி காலை பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கின்றார்.

இதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. இரண்டு சந்திப்பையும் முடித்துவிட்டு டெல்லியில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி வீட்டிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!