---Advertisement---

3 நாட்களுக்கு பிறகு… மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் நிலவரம் இதோ…!

By Sri
Published on: September 20, 2024
---Advertisement---

3 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகின்றது.

இந்தியாவில் தினம்தோறும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. அதிலும் ஜூலை மாதம் ஒரு சவரன் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்து அறிவித்தது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதனால் ஒரு சவரன் 51 ஆயிரத்துக்கும் சென்றது. ஆனால் இந்த சந்தோஷம் தொடர்ந்து நீடிக்கவில்லை. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கின. அந்த வகையில் ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகின்றது.

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை கடந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 080 ரூபாய்க்கும், ஆபரண தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் இருந்து 6,885 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து 97.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?