---Advertisement---

4 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

By Sri
Published on: September 17, 2024
---Advertisement---

4 நாட்களுக்கு பிறகு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகி வருகின்றது.

இந்தியாவில் தினம்தோறும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. அதிலும் ஜூலை மாதம் ஒரு சவரன் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்து அறிவித்தது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதனால் ஒரு சவரன் 51 ஆயிரத்துக்கும் சென்றது. ஆனால் இந்த சந்தோஷம் தொடர்ந்து நீடிக்கவில்லை. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கின. அந்த வகையில் ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகின்றது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரண தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து 6,865 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 97 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.