---Advertisement---

நெல்லை தொழிலாளியின் புதிய முயற்சி… களிமண்ணில் விதைகளை வைத்து விநாயகர் சிலை…!

By Sri
Published on: September 4, 2024
---Advertisement---

நெல்லையை சேர்ந்த தொழிலாளி ஒருவர் களிமண்ணில் விதைகளை வைத்து விநாயகர் சிலையை செய்திருக்கின்றார்.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை கிருபா நகரில் மூன்று அடி முதல் 12 அடிவறையில் விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள். இப்படி தயார் செய்யப்படும் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் வாங்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு அவற்றை தாமிரபரணி ஆற்றில் கரைப்பார்கள்.

இந்த சிலைகளில் ரசாயன கலவை மிகுந்ததாக இருப்பதால் அவற்றை ஆற்றில் கரைக்கும் போது நீர் மாசுபடுகின்றது என்று சமீப காலமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிளாஸ்டிக் கலவையால் செய்யப்படும் விநாயகர் சிலைகளை தயாரிக்க கூடாது என்றும் அதனை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆற்றில் கரைக்க இந்த சிலைகளுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் களிமண்ணாலான விதை விநாயகர் சிலைகளை தயார் செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றார் நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 63 வயதான மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்.

ஒவ்வொரு பண்டிகை காலங்களுக்கும் ஏற்றார் போல் களிமண்ணில் பல்வேறு வேலைபாடுகள் செய்து வருகின்றார். 40 வருடத்திற்கு மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது களிமண்ணில் நாவல் மரம் மற்றும் நெல்லிக்காய் மரத்தின் விதைகளை வைத்து விநாயகர் சிலையை உருவாக்கி இருக்கின்றார்.

இந்த சிலைகள் 100-லிருந்து 1000 ரூபாய் வரை விலை போவதாகவும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு அதிகமாக இருப்பதாகவும் வேல்முருகன் கூறியிருக்கின்றார். பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இவரது களிமண்ணால் ஆன விநாயகர் சிலை விற்பனை அமோகமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?