---Advertisement---

ஒரு பெண் கொடூரமாக இறந்திருக்காங்க… நீங்க சிரிக்கிறீங்களா…? சுப்ரீம் கோர்ட்டில் கபில் சிபிலுக்கு கிழி…!

By Sri
Published on: August 23, 2024
---Advertisement---

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கி இருக்கின்றது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை முன்வைத்த சிபிஐ தரப்பு கொல்கத்தா காவல்துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாக காலை 10.10 மணிக்கு மட்டுமே பதிவிடப்பட்டிருக்கின்றது. அன்று மாலை தான் போலீசார் சம்பவ இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று விளக்கிக் கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாக கூறப்படுகின்றது.

இதை பார்த்து எரிச்சல் அடைந்த துஷார் மேத்தா கபில் சிபிலை நோக்கி ஒரு பெண் கொடூரமான முறையிலும் கண்ணிய குறைவான வகையிலும்  உயிரிழந்ததற்காக குறைந்தபட்சம் சிரிக்காமல் ஆவது இருங்கள் என்று காட்டமாக பேசி இருக்கின்றார்.

https://twitter.com/Vicky_Ydv01/status/1826640591842935161

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க