---Advertisement---

பெரும் விபரீதத்தில் முடிந்த ‘லஞ்ச் பீரியட்’ சண்டை… ராஜஸ்தானில் கலவரம்… மாணவனின் வீடு இடிப்பு…!

By Sri
Published on: August 18, 2024
---Advertisement---

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது பள்ளியில் உணவு இடைவேளையின் போது இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் தொண்டையில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகின்றது.

இதில் காயம் அடைந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் மீது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். கத்தியால் குத்திய மாணவன் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பள்ளி அமைந்துள்ள மதுபன் பகுதியில் உள்ள வாகனங்களை போராட்ட நடத்தியவர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள்.

மேலும் ஒருவர் மீது ஒருவர் கல்வி தாக்குதல் நடத்தினார்கள். தாக்கப்பட்ட சிறுவன் ஐசியு-வில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் உதப்பூர் பகுதியில் இந்து அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய தரப்புக்கு இடையே மோதல் கலவரமாக வெடித்து மத கலவரமாக மாறி இருக்கின்றது. இதனால் 144 தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு கூர்மையான பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆசிரியர்கள் தினமும் மாணவர்களின் புத்தகப் பைவுகளை சோதனை செய்ய வேண்டும். யாராவது கூர்மையான பொருட்களைக் கொண்டு வந்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு கடமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார்.

கத்தியால் குத்திய மாணவனையும் அவரது தந்தையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்த மாணவனின் குடும்பம் குடியிருந்த வீட்டை மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரத்தால் இடித்து தரைமட்டம் ஆக்கி இருக்கின்றது. அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளதாகவும் முறையாக நோட்டீஸ் கொடுத்து விதிகளின் படி வீடு இடிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் தற்போது வரை கலவரங்கள் மற்றும் ஓய்ந்தபாடில்லை.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க