---Advertisement---

PT வாத்தியாரால் சிறுமி பலாத்காரம் செய்து பலி… 30,000 ரூபாயை கொடுத்து சரி கட்ட முயற்சி அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: August 17, 2024
---Advertisement---

நாடு முழுவதும் தற்போது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான நீதி கேட்டு ஒரு புறம் மருத்துவர்கள் தீவிரமாக போராடிவரும் வேளையில் பாலியல் பலாத்காரம் தொடர்பான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பிடி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.

கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த பிடி ஆசிரியர் தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறுமியின் அத்தை ஊருக்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தனக்கு நடந்ததை சிறுமி தனது அத்தையிடம் கூறவே பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வந்திருக்கின்றது. ஆனால் ஊரார் முன்பு அவமானம் படக்கூடுமோ என பயந்த அவர்கள் போலீசில் புகார் அளிக்காமல் தயங்கி வந்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரை சந்தித்த அந்த பிடி ஆசிரியர் 30 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று எச்சரித்திருக்கின்றார். கடந்த மாதங்களில் சிறுமியின் உடல்நிலை மிக மோசமாகி கொண்டே வந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசீர் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் போலீசார் பிடி ஆசிரியரை தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை கடந்த 20 நாட்களாக மிக மோசமாக இருந்ததால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க