---Advertisement---

வயநாடு நிலச்சரிவு… மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேணும்… ராகுல் காந்தி வலியுறுத்தல்…!

By Sri
Published on: August 7, 2024
---Advertisement---

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனன. நிலச்சரிவின் கோரத்தாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டது. கிராமங்கள் மற்றும் மக்கள் பலரும் மண்ணில் புதைந்தும் காற்றாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர்.

மேலும் பலர் காணாமல் போய் உள்ளனர். நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள் காணாமல் போனவர்களை தொடர்ந்து மீட்பு குழுவினர் தேடி வருகிறார்கள். 450 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 150 பேர் காணவில்லை என கூறப்படுகின்றது. தொடர்ந்து மீட்டுப் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் பேசியதாவது “சில நாட்களுக்கு முன்பு எனது சகோதரியுடன் வயநாட்டிற்கு சென்றேன். அங்கு நிறைந்த வலியையும் வேதனையும் என் கண்களால் பார்ப்பேன். 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அனைவரும் தொடர்ந்து வீட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்டவைகளின் உதவிகளை நான் பாராட்ட விரும்புகின்றேன். இது மிகப்பெரிய சோகம். வயநாட்டில் பேரிடரை தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்கவும் மக்களின் மறுவாழ்வுக்கு ஆதரவு அளிக்கவும், நிதி உதவியை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் வயநாட்டு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க