---Advertisement---

சரியான பாதையில் செல்கிறதா வழக்கு?…அண்ணாமலை கேள்வி…

Published on: July 14, 2024
Annamalai
---Advertisement---

தமிழ் நாட்டையே சமீபத்தில் உலுக்கியது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம். சென்னை பெரு நகரத்தின் முக்கிய பகுதியில் வைத்து இந்த கொலை சம்பவம் நடந்ததையடுத்து தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து பல்வேறு கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த கொலை வழக்கில் சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது காவல் துறை. இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் காவல் துறையினரிடமிருந்து தப்ப முயன்றததால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று அதிகாலை இந்த என்கவுண்டர் நடந்தது. இந்நிலையில் இந்த என்கவுண்டர் குறித்து தமிழகத்தின் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த போது என்கவுண்டர் குறித்த சந்தேகம் இருப்பதாக சொல்லியிருந்தார்.

Armstrong Stalin
Armstrong Stalin

என்கவுண்டர் குறித்து பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி எதற்காக காவல் பிடியிலிருந்து தப்பி ஓட வேண்டும் என கேள்வி எழுப்பினார். இந்த கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகமும் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Tollywood Buzz: Jr. NTR to Team Up with Director Nelson Dilipkumar?

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவினர் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக நினைக்கப்படுவதால் ஏதோ உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது என்றார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை நியாயமாகவும், துரிதப்படுத்தவும் திமுக அரசை தான் வலியுறுத்தப்போவதாகவும் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?