---Advertisement---

வீக் எண்ட் வேற வருது!…குற்றாலம் போகலாமா வேண்டாமா…சீசன் எப்படி தான் இருக்கு?…

Published on: June 27, 2024
courtallam
---Advertisement---

தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இருப்பது குற்றாலம். ஆண்டு தோறும் சீசன் நேரத்தில் மட்டுமே இங்கு கூட்டம் குவியும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோட்டு குற்றாலத்தை நோக்கி படையெடுக்க துவங்குவர்.

பொதுவாக ஜூன் மாத துவக்கத்திலிருந்து குற்றால  அருவிகளில் தண்ணீர் விழத்துவங்கிவிடும். ஜூலை மாதத்தில் சீசன் கலைக்கட்டும் அனைத்த்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். குளிக்க வரும் பயணிகள் மகிழ்வோடு குளித்து விட்டு தங்களது பொழுதை போக்கி செல்வார்கள். இதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது.

கேரள வனப்பகுதிகலில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் விழத்துவங்கியது. மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவிகளில் குளிக்க கடந்த மூன்று நாட்களாக தடை விதக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பிரியர்கள் சோகத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.

falls
falls

இன்று வியாழக்கிழமை அருவிகளில் குளிக்க கொடுக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது. இதனால் அங்கு மகிழ்ச்சியான சூழல் உருவானது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருவதும்,  மிதமான காற்றுடன் அவ்வப்போது சாரல் விழுந்து வருவது குற்றாலத்தை ரசிக்க வந்தவர்களை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. கருகரு மேகங்கள் புடை சூழ ரம்மியான நிலை தான் இருந்து வருகிறது.

பொது மக்களின் கூட்டம் வேலை நாட்கள் என்பதால் சற்று குறைவாகவெ இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் அனைத்து அருவிகலிலும் தண்ணீர் விழுந்து வருவது, சீசன் நல்ல விதமாக இருந்து வருவது வார இறுதி நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகளை இழுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!