---Advertisement---

படம் ஆச்சு ஹிட்டு!…அதனால தான் சுந்தருக்கு கிடைச்சது சீட்டு!…கமல் கணிப்பு தப்பா போகுமா?

Published on: May 5, 2024
sundar.c
---Advertisement---

.”அரண்மனை- 4″ ரிலீஸான உற்சாகத்தில் இருக்கிறாராம் சுந்தர் சி. கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய “அன்பே சிவம்” படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்காவிட்டாலும், இவருக்கு ஒரு தனி பெயரை வாங்கிக் கொடுத்தது தமிழ் சினிமாவில்.

படம் ஷூட்டிங் முடிந்த பின்னர் கமல்ஹாசன் சுந்தர்.சியை அழைத்து நல்லதை செய்து இருக்கிறீர்கள் அதனால் நிச்சயமாக நல்லதே நடக்கும் என சொல்லி இருந்திருக்கிறார்.

anbae sivam
anbae sivam

தனது மகளினுடைய கல்விக்காக ஒரு பள்ளிக்கு சீட்டு கேட்க சென்று இருக்கிறார் சுந்தர்.சி. நிர்வாகத்தினரோ சுந்தர்.சியை பார்த்து இப்ப வந்து அட்மிஷன் போட வந்திருக்கிறீர்களே?,  உங்க மகளுக்கு சீட்டு கிடைப்பதற்கு வாய்ப்பு ரொம்ப கம்மிதான். எதுக்கும் பள்ளி ப்ரின்ஸ்பாலை நீங்க வெயிட் பண்ணி பாருங்க என சொல்லி இருக்கிறார்கள்.

காத்திருந்து  பள்ளி முதல்வர் வந்த பின்னர் அவரை சந்தித்திருக்கிறார். அவர் இந்தியராம் போல.  சுந்தர்.சியை பார்த்து என்ன வேலை பார்கின்றீர்கள்  எனக்கேட்க, சினிமாவில் பணியாற்றுவதாக சொல்லியிருக்கிறார். அதனால் சினிமா குறித்த பேச்சுக்கள் வரத் துவங்கியதாம்.

பள்ளி முதல்வர் ஒரு ஹிந்தி படத்தை குறிப்பிட்டு, தமிழ் சினிமாவில் ஏன் இது போல படங்களை அதிகமாக கொடுப்பதில்லை எனக் கேட்டுள்ளார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த ஒரு நல்ல தரமான  படம் என்றால் அது “அன்பே சிவம்” என சொல்லி இருக்கிறார் பள்ளி முதல்வர்.

அருகில் இருந்த குஷ்பூ பள்ளி முதல்வரிடம் அந்த படத்தை இயக்கியதே இவர் தான் என சுந்தர்.சியை பார்த்து கைகாட்டியுள்ளார். உடனே பள்ளி முதல்வர் முதல்வர் “அன்பே சிவம்” படம் இயக்குனரா நீங்க?, அப்போ உங்க பொண்ணுக்கு  சீட்டு இல்லைன்னு சொல்லுவோமா? என சொல்லி உடனே சீட்டு கொடுத்தார்களாம்.

“அன்பே சிவம்”படம் குறித்து கமல்ஹாசன் சொன்னது போல நல்லது செய்ததால் நல்லது நடந்ததாக இந்த சம்பவத்தினை  சுட்டிக்காட்டி பெருமை பொங்க கூறியிருப்பார் சுந்தர்.சி.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!