IPL லீக் போட்டியின் 52வது போட்டி நேற்று இரவு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது.இதில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின், மயங்க் அகர்வால் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். பூரண் 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். மந்தீப் சிங் 17 பந்துகளில் 25 ரன்கள் மற்றும் சாம் கரண் 24 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில், 183/6 ரன்கள் குவித்தது.
184 என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கட்டா அணியின் வீரர்கள் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை தொம்சம் செய்தனர். சுப்மன் கில் 49 பந்நுகளில் 65 ரன்கள், லின் 22 பந்துகளில் 46 ரன்கள் மற்றும் உத்தப்பா 14 பந்துகளில் 22 ரன்கள், ரசல் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தனர். இறுதியில் கொல்கட்டா அணி எளிதில் இலக்கை எட்டியது. இறுதியில் 18 ஓவர்களில் 186 ரன்கள் குவித்து கொல்கட்டா அணி வெற்றி பெற்றது.
இதனால் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. கொல்கட்டா அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.







