---Advertisement---

சேலம் புகழ் தட்டுவடை செட் செய்வது எப்படி

Published on: May 2, 2022
---Advertisement---

விதவிதமான உணவுகளை ருசிப்பது ஒரு கை வந்த கலைதான். ஒவ்வொரு ஊருக்கும் சில உணவுகள், தின்பண்டங்கள் ரொம்பவும் பேமஸ் அந்த வகையில் சேலத்தில் புகழ்பெற்றது தட்டுவடை செட்.

இந்த தட்டுவடையை நாம் எப்படி செய்து சாப்பிடுவது என பார்ப்போம்.

தட்டை – 12

கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை – அரை கப்
வெங்காயம் – ஒன்று
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்
காரச் சட்னி – 6 டீஸ்பூன்
புதினா சட்னி – 6 டீஸ்பூன்
மாங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன் (விரும்பினால்)
சாட் மசாலாத்தூள் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்
கேரட் துருவலுடன் பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கிகொள்ளுங்கள்.
கொத்தமல்லி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். 12 தட்டைகளில் 6 தட்டைகளை இடைவெளி விட்டு வையுங்கள். தட்டைகளில் கார சட்னி தடவி கொள்ளுங்கள். ஒவ்வொரு தட்டையிலும் கேரட் துருவல்,பீட்ரூட் துருவலை மேலே சேர்த்து விடவும். பிறகு அதன் மேல், வெங்காயம், கொத்தமல்லி தழை, மாங்காய் துருவல். சாட் மசாலா போன்றவற்றை சேர்க்கவும், மீதமுள்ள தட்டைகளில் புதினா சட்னி தடவி ஒவ்வொரு தட்டையின் மேலே வைத்து அப்படியே சாப்பிடவும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.