---Advertisement---

இலங்கையில் பெரும்பான்மையை இழந்த அரசு- எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் அபாயம்

Published on: April 5, 2022
---Advertisement---

இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு இன்று பெரும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள், வழக்கறிஞர்களுடன் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதில் பங்கேற்றனர்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

 

நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, இடைக்கால அமைச்சர்களாக 4 பேர் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களில் திடீரென நிதியமைச்சர் அலி சப்ரி பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. ஆனால் பெரும்பாலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. இலங்கை மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆளும் கட்சி கூட்டணிக்கு 157 எம்.பிக்களின் பலம் உள்ளது. ஆனால் ஆளும் கூட்டணியை சேர்ந்த 50 முதல் 60 எம்பிக்கள் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு ஆதரவு தர மறுத்துள்ளனர். இதனால் ஆளும் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் மகிந்த ராஜபக்சே இறங்கியுள்ளார்.

 

இதனிடையே அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இன்று பெரும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்களும் பங்கேற்றனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இடைக்காலப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் பேசுமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
‘‘இலங்கை நெருக்கடிக்கு தீர்வு காண முதல் நிபந்தனை தற்போதைய அரசு வெளியேற வேண்டும். அதற்கு பதிலாக இடைக்கால அரசு இருக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் விமல் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Infographic showing the debut election performance comparison of South Indian actors Vijay, NTR, MGR, Chiranjeevi, Vijayakanth, and Pawan Kalyan.

South India Politics : தென்னிந்தியாவை அதிரவைத்த விஜய்! என்டிஆர் சாதனையை நெருங்கிய ‘தவெக’ – எம்ஜிஆரின் சாதனை முறியடிப்பு!

Global Star Ram Charan's intense and gritty look in the official worldwide release poster of the movie Peddi.

The Warrior Arrives: “வைராக்கியமே அவனது ஆயுதம்!” – ராம் சரணின் ‘பெத்தி’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

A creative graphic featuring T. Rajendar and TVK President Vijay celebrating the party's 108-seat victory in the 2026 elections.

Poetic Praise from TR: “108 தொகுதிகளில் வெற்றி!” – தவெக தலைவர் விஜய்க்கு டி.ராஜேந்தரின் அதிரடி வாழ்த்து!

Actress Tamannaah Bhatia speaking emotionally during a recent interview about love, relationships, and the negative impact of expectations.

Deep Words from Tamannaah: “காதலில் எதிர்பார்ப்பு எப்போது வினையாகும்?” – தமன்னா சொன்ன அந்த ஒரு கசப்பான உண்மை!

A nostalgic and joyful picture of actresses Trisha Krishnan and Charmme Kaur together, celebrating their friendship.

A Sisterhood of Success: “லக்கி மாஸ்காட் திரிஷா!” – பாசமழை பொழிந்த சார்மி கவுர்; வைரலாகும் பர்த்டே விஷ்!

A combined image showing actor Mahesh Babu's tweet and actor Vijay's victory moment during the 2026 Tamil Nadu elections.

From One Superstar to Another: “மக்களின் நம்பிக்கை.. தமிழகத்தின் முன்னேற்றம்!” – விஜய்யின் வெற்றியைத் தெறிக்கவிட்ட மகேஷ் பாபு!