---Advertisement---

முற்பிறவிகளின் கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் அண்ணாமலை கிரிவல நாட்கள்!!! 2022டூ 2023

Published on: April 4, 2022
---Advertisement---

 

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே மனிதப் பிறவி எடுத்துள்ளார்கள்:

முற்பிறவிகளின் கர்மவினைகளில் தீய கர்மவினைகளை ஏழரைச்சனி காலத்திலும்,அஷ்டமச்சனி காலத்திலும் அனுபவிக்க வேண்டும்;நல்ல கர்மவினைகளை மற்ற காலங்களிலும் அனுபவிக்க வேண்டும்;

இருப்பினும்,ஈசன் கருணை நிறைந்தவர்!

கர்மவினைகளை அனுபவிக்காமலேயே அழிப்பதற்கு பல்வேறு விதமான புண்ணியச் செயல்களை சித்தர் பெருமக்கள் மூலமாக உபதேசம் செய்துள்ளார்;

உழவாரப் பணி செய்தல்,

அன்னதானம் செய்தல்,

முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தல்,

பாழடைந்த ஆலயங்களை சீரமைத்தல்,

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு மீண்டும் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்தல்,

ஆன்மீகப் பிரச்சாரம் செய்தல்,

ஆன்மீக நூல்கள் அச்சடித்து வினியோகம் செய்தல்,

ஆன்மீக சொற்பொழிவுக்கு மக்களை திரட்டுதல்,

மதமாற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தல் அல்லது முயற்சி செய்பவர்களுக்கு பக்கபலமாக இருப்பது,

தேச பக்தியுடன் கூடிய தெய்வ பக்தியை இன்றைய இளைய சமுதாயத்திற்கு போதிக்க பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல்

என்று பலன் தரும் செயல்களைச் செய்யலாம்;

ஒவ்வொருவருக்கும் தனி மனித

ஆன்மீக கடமை,

குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமை,

சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமை,

முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமை

என்று இருக்கின்றது;

அதில் மிகவும் முக்கியமானது தான் தனி மனித ஆன்மீகக் கடமை ஆகும்;

தனது அனைத்து முற்பிறவிகளிலும் செய்த கர்மவினைகளை முழுமையாக கரைக்க குறிப்பிட்ட நாளில் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

நம்முடைய முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் நமக்கு இந்த பிறவியில் இருந்தால்,ஒரே ஒரு முறையாவது அண்ணாமலை கிரிவலம் செல்லும் பாக்கியம் நமக்கு கிட்டும்;

விழுப்புரம் அருகில் அமைந்திருக்கும் அண்ணாமலை தான் உண்மையான அண்ணாமலை!

திரயோதசி திதியும் ஜன்ம நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கிரிவலம் செல்வதால்,நம்முடைய முற்பிறவி கர்மவினைகள் தீர்ந்துவிடும் என்பது சித்தர்களின் ஜோதிட உபதேசம்!

14.4.2022 வியாழன் விடிகாலை 3.33 முதல் காலை 8.46 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,

காலை 8.47 முதல் பின் இரவு 3.14 வரை உத்திரம் (சிம்மம் & கன்னி) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

27.4.2022 புதன் நள்ளிரவு 2.10 முதல் 28.4.2022 வியாழன் இரவு 7.00 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

அன்று இரவு 7.01 முதல் நள்ளிரவு 1.47 வரை ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

13.5.2022 வெள்ளி மதியம் 3.12 முதல் மாலை 4.47 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

மாலை 4.48 முதல்
14.5.2022 சனி மதியம் 1.57 வரை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

27.5.2022 வெள்ளி மதியம் 2.17 முதல் 28.5.2022 சனி விடிகாலை 4.24 வரை அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்
விடிகாலை 4.25 முதல் மதியம் 2.52 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

11.6.2022 சனி இரவு 12.28 முதல் 12.6.2022 ஞாயிறு இரவு 10.22 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

25.6.2022 சனி நள்ளிரவு 3.34 முதல் 26.6.2022 ஞாயிறு மதியம் 3.22 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,

மதியம் 3.23 முதல் நள்ளிரவு 4.10 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

11.7.2022 திங்கள் காலை 8.06 முதல் நள்ளிரவு 3.40 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

25.7.2022 திங்கள் மாலை 6.12 முதல் நள்ளிரவு 3.17 வரை மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் (ரிஷப ராசி & மிதுன ராசி)

நள்ளிரவு 3.18 முதல்
26.7.2022 செவ்வாய் இரவு 8.05 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

9.8.2022 செவ்வாய் மதியம் 3.05 முதல்
10.8.2022 புதன் காலை 8.34 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்
காலை 8.35 முதல் மதியம் 12.39 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

24.8.2022 புதன் காலை 9.47 முதல் மதியம் 3.33 வரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

மதியம் 3.34 முதல்
25.8.2022 வியாழன் காலை 11.38 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

7.9.2022 புதன் இரவு 10.32 முதல்
8.9.2022 வியாழன் மதியம் 1.31 வரை திரு ஓணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,

மதியம் 1.32 முதல் இரவு 8.18 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

22.9.2022 வியாழன் நள்ளிரவு 1.49 முதல்

23.9.2022 வெள்ளி நள்ளிரவு 3.07 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

7.10.2022 வெள்ளி காலை 7.14 முதல் மாலை 6.59 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்
இரவு 7 முதல் நள்ளிரவு 4.16 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

22.10.2022 சனி மாலை 5.22 முதல்
23.10.2022 ஞாயிறு மதியம் 2.58 வரை உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,

மதியம் 2.59 முதல் மாலை 5.44 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

5.11.2022 சனி மாலை 6.06 முதல் நள்ளிரவு 1.23 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

நள்ளிரவு 1.24 முதல்
6.11.2022 ஞாயிறு மாலை 5.11 வரை ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

21.11.2022 திங்கள் காலை 8.05 முதல் இரவு 11.13 வரை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,

இரவு 11.14 முதல்
22.11.2022 செவ்வாய் காலை 7.26 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

5.12.2022 திங்கள் காலை 7.29 முதல் காலை 9.06 வரை அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 9.07 முதல்
6.12.2022 செவ்வாய் காலை 7.36 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

20.12.2022 செவ்வாய் இரவு 9.20 முதல்
21.12.2022 புதன் காலை 6.04 வரை விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,

காலை 6.05 முதல் இரவு 7.50 வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

3.1.2023 செவ்வாய் இரவு 11.40 முதல்
4.1.2023 புதன் இரவு 8 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,

இரவு 8 முதல் இரவு 12.50 வரை மிருக சிரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

19.1.2023 வியாழன் காலை 9.19 முதல் காலை 11.52 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

காலை 11.53 முதல்
20.1.2023 வெள்ளி காலை 7.16 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

2.2.2023 வியாழன் மாலை 6 முதல்
3.2.2023 வெள்ளி காலை 7.32 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்
காலை 7.33 முதல் இரவு 7.56 வரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

17.2.2023 வெள்ளி இரவு 8.08 முதல்
18.2.2023 சனி மதியம் 3.30 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்
மதியம் 3.31 முதல் மாலை 5.48 வரை திரு ஓணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

4.3.2023 சனி மதியம் 1.10 முதல் இரவு 7.54 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

இரவு 7.55 முதல்
5.3.2023 ஞாயிறு மதியம் 3.14 வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

18.3.2023 சனி பின் இரவு 3.37 முதல்
19.3.2023 ஞாயிறு இரவு 8.32 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

இரவு 8.33 முதல் நள்ளிரவு 3.39 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

4.4.2023 திங்கள் காலை 7.22 முதல் காலை 8.11 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

காலை 8.12 முதல்
5.4.2023 செவ்வாய் காலை 8.55 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

இதில் உங்கள் நட்சத்திரம் மற்றும் ராசி வரவில்லையா? 14.4.2023க்குப் பிறகு வர இருக்கும் சுபகிருது வருடத்தில் வரலாம்;

உங்கள் முன்னோர்களாகிய பித்ருக்கள் மற்றும் குலதெய்வத்தின் ஆசிகள் உங்களுக்கு மிகுதியாக இருந்தால் மட்டுமே இப்பிறவியில் ஒரே ஒரு முறையாவது அண்ணாமலை கிரிவலம் செல்ல முடியும் என்பதும் சித்தர் பெருமக்களின் உபதேசம் ஆகும்;

சிவராஜயோக ஜோதிடர்

வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Urvashi talking about legendary Tamil cinema comedian Kumari Muthu and his inspirational life lesson lines.

“அனைவரும் கிண்டல் செய்த அதே கண்கள் தான்…” லெஜண்ட் குமாரி முத்து சொன்ன வார்த்தை… சமீபத்திய பேட்டியில் உருகிய ஊர்வசி!

Actor Sivakarthikeyan and director Venkat Prabhu upcoming film with Sathya Jyothi Films production inside buzz and industry rumors.

சத்யஜோதி நிறுவனத்துடன் திடீர் மோதல்? சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் கைவிடப்பட்டதாகப் பரவும் ஷாக்கிங் வதந்திகள்!

Actor R Madhavan next pan India movie GDN official theatrical release date poster produced by Varghese Moolans Pictures and Tricolour Film.

ஜூலை 17 அன்று தியேட்டர்களில் ஆட்டம் ஆரம்பம்; மாதவனின் மெகா பட்ஜெட் படத்தின் ஓடிடி பார்ட்னர் இவர்தான்!

Thalapathy Vijay and veteran actor Indrans in an iconic sequence from Nanban movie stills.

தளபதி விஜய்யின் படத்தில் அந்த ஒரே ஒரு சீன்; மலையாள நடிகர் ஓப்பனாக உடைத்த பல வருட ரகசியம்!

Hollywood legendary actor and director Clint Eastwood celebrating his 96th birthday with Jigarthanda DoubleX movie references.

96-வது வயதில் காலடி எடுத்து வைக்கும் உலக சினிமா ஜாம்பவான்; ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் காம்போவை கொண்டாடும் ரசிகர்கள்!

Director Gowtham Sivaraman and music director Leon James attending Drama Company Production No 1 movie official launch pooja ceremony.

டிராமா கம்பெனியுடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்; புதிய இயக்குநரின் பிரம்மாண்ட படத்தில் களம் இறங்கும் 2 டாப் நடிகைகள்!