---Advertisement---

உச்சநீதிமன்ற நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்பு

Published on: March 19, 2022
---Advertisement---

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முஸ்லிம்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த  அறிக்கையில் ”கடந்த 17.03.2022 அன்று ஹிஜாப் சம்பந்தமாக மதுரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில்  கண்டனப் பேரணி நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா இந்த நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

அவர் நம் பாரத நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து  பேசியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் வாகனத்தில் செல்லும்போது கொல்லப்பட்டால்  அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் முழு பொறுப்பு என்றும் உணர்ச்சி பொங்க பேசினார். அவர் பேசியதற்கு பேரணியில் எழுப்பப்பட்ட கோஷங்கள்  நீதிபதிகளையும், நீதித்துறையையும்  மிரட்டும் வகையில் அமைந்திருந்தது.

அது மட்டுமன்றி சென்ற மாதம் நீதிபதியின் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று வந்ததையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம் என்று பேசினார். ஏதோ ஒரு முஸ்லிம்  இளைஞன் இவ்வாறு பேசி விட்டான் எந்த எடுத்துக் கொள்ளலாம் என்றால், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் அவரது கருத்தை ஆதரிக்கும் விதமாக கோஷமிட்டுள்ளனர். இது அவருடைய தனிப்பட்ட கருத்து மட்டும் அல்ல, அங்கே இருந்த மொத்த முஸ்லிம்களின் கருத்தும் அதுதான் உறுதி செய்யும் வகையில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட வீடியோக்கள் வெளியாகின.

இந்திய திருநாட்டின்  உச்சநீதிமன்ற நீதிபதிகளையே  கொலை செய்வோம் என்று முஸ்லிம்கள் எச்சரிப்பதை இந்து முன்னணி  வன்மையாக கண்டிக்கிறது. நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட இத்தகைய மிரட்டலை முஸ்லீம்  சமூகத்தைச் சார்ந்த பெரியவர்களும், இயக்கங்களும்  இதுவரை கண்டனம் கூட தெரிவிக்காதது அவர்களும் அதனை ஆதரிப்பது போல் அமைந்துள்ளது.

மேலும் நீதித்துறையின் மாண்பைக் காக்க வேண்டிய வழக்கறிஞர் பெருமக்களும் குறிப்பாக தமிழக வழக்கறிஞர்கள் யாரும் கூட இது குறித்து கண்டனம் தெரிவிக்காதது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

இம்மாதிரி நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இத்தகைய பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர்கள் பின்புலம் கண்டறிவதோடு மட்டுமல்லாமல் அந்த அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Latha Rajinikanth announces the launch of her new citizen welfare and people's movement named Makkal Medai in Tamil Nadu.

ரஜினி வழியில் லதா ரஜினிகாந்த் எடுத்த திடீர் முடிவு… ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் புதிய இயக்கம்… கைகோர்க்க அழைப்பு!

Actors Tovino Thomas and Basil Joseph featured in a vibrant digital poster announcing the Athiradi OTT release date on SonyLIV.

தியேட்டர்களில் 50 கோடி வசூலித்த மரண மாஸ் ஹிட் படம்… திடீரென ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த சோனி லிவ்!

Actor Vijay Sethupathi holding a blood-stained weapon in an intense action-packed poster announcing the Slumdog teaser release date.

த்தக் கறையுடன் கத்தியை ஏந்தி நிற்கும் மக்கள் செல்வன்… மிரட்ட வரும் ‘ஸ்லம்டாக்’ பட டீசர்… வெளியீட்டு தேதியை லாக் செய்த படக்குழு!

Comedian Vadivelu sharing an emotional memory about how actor and director Rajkiran gave him a break and supported his early cinema life.

யார் அந்த உன்னதமான மனிதர்? “அன்னைக்கு அவர் மட்டும் சாப்பாடு போட்டு வளர்க்கலனா நான் இல்லை…” பேட்டியில் வடிவேலு சொன்ன ரகசியத்தால் உருகிய கோலிவுட்!

Director Sasi explaining the emotional reason behind choosing his upcoming movie title Noorusami in a recent interview.

இன்னைக்கும் பலரோட போன் ரிங்டோன் அதுதான்… புதிய படத்திற்கு நூறுசாமி என பெயர் வைக்க இதுதான் காரணமாம்… ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி!

Actor Arya reportedly planning to make his directorial debut with a self-written script after finishing acting commitments.

தனுஷ் மற்றும் சிம்புவை தொடர்ந்து இயக்குநராக மாறும் ஆர்யா… கோலிவுட்டில் வெடித்த புதிய வதந்தி!