---Advertisement---

IPL 2019 : ரஹானேவின் சதம் வீண்! டெல்லி அபார வெற்றி!!

By Sri
Published on: April 23, 2019
RR vs DC Highlights
---Advertisement---

IPL போட்டியின் 40வது லீக் போட்டி, நேற்று ஜெய்பூரில் நடந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் நிலைக்கவில்லை. அடுத்து அதிரடியில் இறங்கிய ரஹானே இறுதி வரை அவுட்டாகாமல் இருந்து சதம் அடித்து அசத்தினார். ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் ஸ்மித் அதிரடியாக ஆடினர். ரஹானே 63 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார். ஸ்மித்தும் தன் பங்கிற்கு 32 பந்துகளில் அரை சதம் (50) விளாசி ரன்னை உயர்த்தினார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 191/6 ரன்கள் குவித்திருந்தது.

192 என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணியின் ஷிகர் தவன் 27 பந்துகளில் 54 ரன்கள் விளாசி ரன்அவுட்டானார். ப்ரித்விஷா 39 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியில் இறங்க, 4 சிக்ஸ் மற்றும் 6 பவுன்டரிகள் விளாசி, 36 பந்துகளில் 78 ரன்கள் விளாசி , அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இறுதியில், 19.2 ஓவர்களில் டெல்லி அணி 193/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டெல்லி அணி, புள்ளி பட்டியலில், சென்னை அணியை 2வது இடத்திற்கு தள்ளி, முதல் இடத்தை பிடித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.