---Advertisement---

கருணாநிதி கூட இப்படி இல்லை- முதல்வர் ஸ்டாலின் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி

Published on: February 26, 2022
---Advertisement---

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் மோசமாக உள்ளார்” என்று கட்சி நிர்வாகிகளிடையே அதிமுக கொறாடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், எஸ்.பி.வேலுமணி. தலைமையில் கோவை மாநகர், புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.26) நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகளிடையே எஸ்.பி.வேலுமணி பேசியது: “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஒரு சிலர் திமுகவுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அக்கட்சியில் மதிப்பில்லை. சென்ற வேகத்தில் திரும்பிவர தயாராகின்றனர். ஒருவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், அடுத்தமுறை மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், திமுகவுக்கு சென்றால் வாய்ப்புக்கான கடைசி இடத்தில் இருக்க வேண்டி வரும்.

திமுகவினர் எப்படி இந்த அளவுக்கு வெற்றி பெற்றனர் என்று மக்களே குழம்பிப்போயுள்ளனர். அதிமுகவினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய்வழக்கு போடுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். ஜெயக்குமாரைப் போல எங்களையும் சிறையில் அடையுங்கள். அதற்குமேல் உங்களால் என்ன செய்ய முடியும். இதற்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. பொய்வழக்குகளில் நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். தோல்வியைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். வேட்பாளர்கள், கிளைச் செயலாளர்கள் என அனைவரும் தேர்தலின்போது இரவு, பகலாக பாடுபட்டுள்ளீர்கள். அதற்கு பலன் கிடைக்கும். கண்டிப்பாக நமக்கு வெற்றிவரும்.

திமுகவை எப்படியும் வீழ்த்துவோம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் மோசமாக உள்ளார். யார், யார் திமுகவை, முதல்வரை எதிர்த்து பேசுகிறார்களோ, அவர்கள் மீது தற்போது பொய் வழக்கு போடுகின்றனர். எனவே, அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். ஜெயக்குமார் கைதை கண்டித்து வரும் 28-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகமானோர் திரண்டுவந்து கலந்துகொள்ள வேண்டும்” என்றார்.

இந்தக் கூட்டதில், எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Abishan Jeevinth facing the camera for his official first shot alongside legendary Kannada actor Shiva Rajkumar on the sets of Drama Company Production No 1.

கேப்டன் மில்லரைத் தொடர்ந்து தமிழில் சிவராஜ்குமாரின் அதிரடி ஆட்டம்; பூஜையுடன் துவங்கிய புதிய மெகா மூவி!

Warner Bros India announcing The End of Oak Street movie release in IMAX and theaters for August 2026 in English, Tamil, Telugu, and Hindi.

திரையரங்குகளை அதிரவைக்க வரும் வார்னர் பிரதர்ஸின் மெகா படம்… தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த அசாத்திய சர்ப்ரைஸ்!

Actress Janhvi Kapoor sharing her appreciation for Tollywood work culture and discipline on movie sets.

மதிய உணவு இடைவேளையில் குட்டித் தூக்கம்… தெலுங்கு படப்பிடிப்பு தளங்களின் ரகசியத்தை உடைத்த ஜான்வி கபூர்!

Actress Priyanka Mohan receiving the Honorary Ambassador award from the President of Korea Tourism Organization after Made in Korea movie success.

கொரியாவில் படம் எடுத்ததால் கிடைத்த மெகா கௌரவம்… சர்வதேச தூதராக மாறிய நடிகை பிரியங்கா மோகன்!

Actress Trisha Krishnan sharing her smiling magical may memory clicks on Instagram amid marriage rumors with CM Vijay in political circles.

த்ரிஷாவின் இன்ஸ்டா ‘மேஜிக்கல் மே’ போஸ்ட்; முதல்வர் விஜய் திருமண வதந்திகளுக்கு நடுவே இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Actress Urvashi talking about legendary Tamil cinema comedian Kumari Muthu and his inspirational life lesson lines.

“அனைவரும் கிண்டல் செய்த அதே கண்கள் தான்…” லெஜண்ட் குமாரி முத்து சொன்ன வார்த்தை… சமீபத்திய பேட்டியில் உருகிய ஊர்வசி!