தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் விழா கொண்டாடுவதற்காக பொதுமக்களுக்கு சிறப்பு தொகுப்பு ஒன்று வழங்கப்படுகிறது.
இந்த தொகுப்பில் மஞ்சள்தூள், மிளகாள்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொகுப்பில் முறைகேடுகள் நடப்பதாகவும் பல ஊர்களில் பொருட்களை குறைத்து குறைத்து கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி கொடுத்தால் அதில் தவறு ஏதும் நேர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.













