சூர்யாவை உதைப்பேன் என சொன்னவரை உதைத்தால் நான் பணம் தர்றேன்  – சீமான்

சூர்யாவை உதைப்பேன் என சொன்னவரை உதைத்தால் நான் பணம் தர்றேன் – சீமான்

ஜெய்பீம் சர்ச்சைகளால் இரண்டு நாட்களாக சமூக வலைதளம் முழுவதும் அதை பற்றிய பேச்சாகவே இருந்து வருகிறது. சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு என பாமக தலைவர்கள் ஒருவருக்கொருவர் அறிவிக்க இது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது சூர்யா என்ன செந்திலா எட்டி உதைப்பதற்கு அண்ணன் சிவக்குமார் குடும்பம் எப்போதும் ஒருவரிடம் வம்பு இழுக்க வேண்டும் என்ற நோக்கில் பேச மாட்டார்கள் எந்த ஒரு பிரச்சினையும் முடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

சூர்யாவை எட்டி உதைப்பேன் என்று சொன்னவரை உதைத்தால் நான் பணம் தருகிறேன் என சீமான் கூறியுள்ளார். மேலும் ஒரு இனத்தை திருப்திபடுத்துவதற்காக இன்னொரு இனத்தை தாழ்த்த கூடாது எனவும் சூர்யாவுக்கும் வன்னியர் சங்கத்துக்கும் இருவருக்கும் சமரசமாக ஒரு பதிலை சீமான் கூறியுள்ளார்.