தற்போது சென்னை நகரில் மழை வெள்ளம் கடந்த 2015ல் வந்தது போல் இல்லாவிட்டாலும் அதற்கு இணையாக ஊரெங்கும் மழை வெள்ளமாக இருக்கிறது. மக்கள் செல்வதற்கு போட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பெய்ந்த மழையில் வெள்ளம் வடியாததாலும் புதிதாக வேறு மழை பெய்து வருவதாலும் மக்கள் சொல்லொணா துயறுற்று வருகின்றனர்.
இந்த நேரத்தில் தெருவோரம் இருக்கும் நாய்கள், விலங்குகள் போன்றவற்றை விரட்ட வேண்டாம் அதை கருணையோடு பராமரியுங்கள் என்பதே விலங்கின ஆர்வலர்களின் நிலைப்பாடு.
மழைவெள்ளம் வடிந்தால் அதுவே சென்று விடும் நிலையில் விலங்குகளை விரட்டவேண்டாம் என்பதே இவர்களின் கோரிக்கை.
அனைத்தும் உயிர்கள் தான் என்றெண்ணி அனைத்து உயிரையும் காப்போம்.













