யுவன் சங்கர்ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்து வெளியிட இருக்கும் படம் மாமனிதன். இப்படத்தை கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கி வருகிறார்.
இப்படத்தில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக்ராஜா மூவரும் பணியாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் புதிய படங்களை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதி கயிறு திரிப்பவராக நடித்துள்ளார்.







