சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் ஒருவழியாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது,. இந்த படம் முதலில் ஆரம்பித்து விட்டு நீண்ட வருடங்கள் பிரச்சினையில் இருந்தன. சிம்பு நடிக்க வரவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது.
இந்த பஞ்சாயத்துகள் எல்லாம் சரி செய்து கடந்த வருடம் தான் ஷூட் ஆரம்பிக்கப்பட்டது. நடுவில் தடையாக கொரோனா வந்து விட்டது.
கொரோனா தடை முடிந்த உடன் ஷூட் வேகமாக தொடங்கி முடிந்து விட்டது.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ள நிலையில் இப்படம் ஏ டே என்ற ஒரு கொரிய படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக அந்த பட நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் யாரிடமும் தங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை என வெங்கட்பிரபு கூறியுள்ளார்.







