சென்னையில் உள்ள ஆவடியை அடுத்த திருநின்ற ஊரில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஸ்னாக்ஸ் கடையில் காலிப்ளவர் பக்கோடாவை ஒரு குடும்பத்தினர் சாப்பிடுவதற்காக வாங்கி சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த அவர்கள் காலிப்ளவர் பாக்கெட்டில் ரத்தம் சுற்றிய பேண்டேஜ் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.
கடைக்கு வந்து கடைக்காரர்களிடம் சண்டை போட்டனர். இதை பார்த்து பொறுப்பற்ற பதிலை கடைக்காரர்கள் சொல்லவும் அவர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் புகாரளித்தனர்.
இப்புகாரை விசாரித்த உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் அக்கடைக்கு 5200 ரூபாய் அபராதம் விதித்தனர்.







