---Advertisement---

IPL 2019: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு 12 லட்சம் அபராதம் – ஐ.பி.எல் நிறுவனம்!

By Sri
Published on: March 31, 2019
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா
---Advertisement---

9 வது ஐ.பி.எல் போட்டி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடந்தது. அந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இப்போட்டி, இரவு 7.30 மணிக்கு முடிவடைய வேண்டிய நிலையில், இரண்டாவதாக பந்துவீசிய மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் பந்து வீச தாமதமாக்கியதால், அரை மணி நேரம் தாமதமாக, இரவு 8 மணிக்கு தான், இந்த ஆட்டம் முடிவடைந்தது.

அதனால், தாமதமாக பந்துவீசிய மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு 12 லட்சம் அபராதம் விதித்து, ஐ.பி.எல் நிறுவனம் உத்திரவிட்டுள்ளது. இதனால், ஐ.பி.எல் 2019 ல் ரோகித் ஷர்மாவிற்கு இதுவே முதல் அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.